Search This Blog Or Web

Daily Updates Follow By Email:

Delivered by FeedBurner

Special post

Vinayagar wallpapers free download || Lord Ganesh Pictures || Gods Pillaiyar Mobile Images Free Download || Lord Pillaiyar Pictures Free Download || Collections Of Cute Pillaiyar Images

Free Cute Vinayagar Mobile Pictures WallPapers Images Themes                                                

Whatsapp Tamil Stories Read It & Share It || Whatsapp Tamil Kavithai || inspire tamil story

வாட்ஸாப் தமிழ் கவிதை
  1. இளமையில் ஆண் என்ற அகந்தையில்  ஆணவத்துடன் இருந்த   கணவனின் முதுமைகாலப் புலம்பல் கவிதை..  


முதிய  எழுபத்தைந்து வயதில்.....
ஆதரவு இன்றி நிக்குது மனசு...

நாற்பதைந்து
வருடம் - அவளை
கொண்டாடி இருக்கலாம்....

என்
கோபத்தை தள்ளுபடி செய்து
அவளை கொண்டாடி இருக்கலாம்....

அவள்
சமையலை நிறைய
பாராட்டி இருக்கலாம்..

ஒரு நாள்
நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்..

ஒரு நாளேனும்
அவளுக்கு பதில் - நான்
அவள் துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்..

ஒரு நாளேனும்
TV யையும்,
Mobil லையும்  அனைத்து
கொஞ்சுவதை விட்டு,
அவளை கொஞ்சி இருக்கலாம்..

ஒரு நாளேனும்
வேலை தளத்தின்
கோபத்தையும்
எரிச்சலையும் அங்கேயே
விட்டு விட்டு வந்து இருக்கலாம்...


ஒரு நாளேனும் - என்
விடுமுறை நாட்களில் - அவளை
சினிமாக்கு அழைத்து
சென்று இருக்கலாம்..

ஊர் ஊராய் சுற்றி
உற்சாகம் அடைந்து
இருக்கலாம்...

அவள் விரும்பி
கேட்காத போதும் - ஒரு sarry 
வாங்கி கொடுத்து
இருக்கலாம்

ஒரு மாதமேனும் - என்
முழு சம்பள பணத்தை
அவளிடமே கொடுத்து
இருக்கலாம்....

ஒரு நாளேனும்
காலையில் அலாரத்தை
கொஞ்சம் அனைத்து வைத்து
அவளை தூங்க விட்டு இருக்கலாம்...

நீ
சாப்பிட்டியா
என்று கேட்டு இருக்கலாம்...

நீயும் வா
என்னுடன் வந்து சாப்பிடு
என்று சொல்லி இருக்கலாம்...

அவள்
உடல் நலத்தை
விசாரித்து இருக்கலாம்...

அவள்
தன்னை கவனிப்பதை விடுத்து
நம் பிள்ளைகளை கவனிப்பதை
நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்..

அவள்
நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும்
காப்பாற்றி இருக்கலாம்...

என்
தாயே தாரமே - நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...

நீ
என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்...

என்னை
தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை...

தேனீரேனும்
போட்டுதர இளையவளுக்கும்
சினம் வருது...

என்
மனைவியே உன்னை
நான் கொண்டாடி இருக்க
வேண்டும் ...

நான்
தவறு இழைத்ததுக்கு
மன்னித்து விடு...

ஒரு முழம் பூ  கூட
வாங்கி தராதவன்
நான்...

மூச்சு இழந்த - உன்
புகைப்படத்துக்கு தினம் தினம்
மாலை இட்டு மன்னிப்பு
கேட்கிறேன் மனைவியே
மன்னித்து விடு..

மீண்டும்
ஒரு பிறப்பு இருக்குமே என்றால்
நீயே மனைவியாய் வந்து விடு
நான் உன்னை கொண்டாட வேண்டும்..

எழுபத்தைந்து வயதில்.....
இந்த நிலை வராமலிருக்க....

மனைவியை
நேசியுங்கள்...

வாழ்க்கை வசந்தமாகும்....!!!
=======================================================

2.  தெனாலிராமனும் ஜோசியரின் வார்த்தையும்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை.

அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான்.

அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான்.

எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்என்றார் ஜோசியர்.

தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்என்று அலறினார்.

அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!
======================================================
3. வார்த்தையின் சக்தி*

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார் ஒருவர் . ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.
இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள்.உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா?அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன் என்றபடி அடிக்கப் பாய்ந்தான். பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார். இதைக் கேட்ட அந்த நாத்திகன் வெட்கித் தலை குனிந்தான்.
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.
நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!
*எண்ணங்கள் அழகானால்..., எல்லாம் அழகாகும்.....


No comments:

Recent Posts

Contact Form

Name

Email *

Message *